பற்றி

மேல்மாகாண மாகாணசபை

மேல்மாகாணம்

மேல்மாகாண மாகாணசபை

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய மேல்மாகாணம், இலங்கையின் உயர்ந்தமட்ட சமூக, பொருளாதார அபிவிருத்தியில் உயர்நிலையை அடைந்துள்ளது.. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 50மூ சதவீதத்திற்கும் கூடுதலான அளவுக்கு அது பங்களிப்புச் செய்கிறது. அதேபோல், நாட்டின் சுற்றுலாக் கைத்தொழிலின் இருதயமாகவும் இம்மாகாணத்தைக் கருதலாம். நாட்டின் சகல சுற்றுலாச் சேவை விநியோக மார்க்கங்களின் கேந்திரஸ்தானமாக அது அமைந்திருப்பதுடன், தீவின் பல்வேறு பகுதி;களையும் நோக்கி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அனுப்பிவைக்கும் மத்தியநிலையமுமாகும். முழுதுமளாவியதாக நோக்குமிடத்து மேல்மாகாணம் இலங்கையின் ஏனைய பெரும்பாலான பகுதிகளை விட அதிகளவான வளங்களைக் கொண்டதாகவும் விளங்குகிறது.

மக்;களின் வாழ்க்கைத்தரத்தைக் கட்டியெழுப்புவதற்காக கமத்தொழில்;, கமநல அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசனங்கள், கைத்தொழில் மற்றும் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளை நெறிப்படுத்துவது மேல்மாகாணத்தின் பணித்திட்டமாகும். மேல்மாகாணம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருப்பதுடன், அது பிரதான விமானநிலையத்துடனும் துறைமுகத்துடனும் இணைந்த வர்த்தக கேந்திரமொன்றை உருவாக்குகிறது. அதேபோல், 48 நிர்வாக நிறுவனங்களும் 6 மாநகர சபைகளும் 13 நகர சபைகளும் 29 பிரதேச சபைகளும் அதில் அடங்கும். அவை யாவும் குறித்த மட்டங்களில் நிர்வாகத்திற்கு உதவுகின்றன.

பேண்தகு அபிவிருத்திக்கு மேல்மாகாணத்தின் அர்ப்பணிப்பு

சமாதானம், சகவாழ்வு மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கு வழியமைத்தல் மேல்மாகாண மாகாணசபையின் தொலைநோக்காகும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு கமத்தொழில், கமநல அபிவிருத்தி, சிறுநீர்ப்பாசனங்கள், கைத்தொழில் மற்றும் சுற்றாடல்சார் செயற்பாடுகளை நெறிப்படுத்துதல் அதன் பணித்திட்டமாகும்.

செயற்பாடுகள்

1.  மேல்மாகாணத்தினுள் கமத்தொழில், கமநல அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் சுற்றாடல்சார் செயற்பாடுகளை மிகவும் பயனுறுதிவாய்ந்த விதத்தில் நெறிப்படுத்துவதற்கு வசதியளிக்கும் கொள்கைகளை வகுத்தமைத்தலும் செயற்படுத்தலும்.

2.  கமத்தொழில் மற்றும் கமநல அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் மேல்மாகாணத்திலுள்ள பல்வேறு சிக்கலார்ந்த நிலைமைகளுக்கு மத்தியில் எழும் பிரச்சினைகளையும் வரம்புகளையும் அடையாளம் காணல், திட்டங்களை வகுத்தல், இணைந்த உபாயமுறைசார் நடவடிக்கைகள், மாற்று நடவடிக்கைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைத் தேவைகளை நிறைவுசெய்யக்கூடிய விதத்தில் தரத்தில் உயர்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் பொருட்டு சிற்றளவு கைத்தொழிலாளர்களைப் பலப்படுத்துதல், ஆக்கபூர்வமான விழிப்புணர்வுக்கான தூண்டுதலையும் ஆலோசனைகளையும் வழங்குதல், மாகாணத்திலுள்ள வளங்களை உச்சளவில் பயன்படுத்தி மரபுவழி மற்றும் காலத்திற்கேற்ற ஆக்கபூர்வமான உற்பத்திகளை மேற்கொள்ளும் பொருட்டு சிற்றளவு கைத்தொழிலாளர்களுக்கும் கைப்பணிகளுக்கும் வரவேற்பொன்றை உருவாக்குதல

3.  நீர்ப்பாசன முகாமைத்துவப் பொறிமுறையை உயர்ந்தளவில்; நெறிப்படுத்துவதன் ஊடாக கமத்தொழில் அபிவிருத்திக்கு வசதியளிக்கக்கூடிய விதத்தில் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக மாகாணத்தில் சிற்றளவு நீர்ப்பாசனத் தொகுதிகளைப் பராமரித்தலும் பேணிச்செல்லலும்.

4.  சுற்றாடலுக்கு இதமான கைத்தொழில் பேட்டைகளை நிறுவுதலும் மனித வாழ்வுக்கேற்ற ஆரோக்கியமான ஒரு சூழலை உருவாக்குவதும் அதன்மூலம் மனித மற்றும் விலங்கு சமுதாயத்தினரின் நன்மை கருதி பேண்தகு சுற்றாடலொன்றைப் பேணிச்செல்ல நடவடிக்கை எடுத்தல்.

5.  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புக்கள் போன்றே மக்களதும் தனியார் துறையினதும் உயர்ந்தபட்ச பங்களிப்பை உறுதிப்படுத்தி மாகாணத்தினுள் கமத்தொழில், கமநல அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசனம், கைத்தொழில் மற்றும் சுற்றாடல்சார் செயற்பாடுகளை பயனுறுதிவாய்ந்த விதத்தில் ஊக்குவித்தல்.

6. நவீன தொழில்நுட்பத்தையும் தொழில்நுட்பவியல்களையும் பிரயோகித்து மாகாணத்தில் உற்பத்தி இயலளவை விருத்திசெய்யும் பொருட்டு உயர்ந்தளவில் உதவுவதற்கான தாபன முகாமைத்துவம்.

7. மாகாணசபையின் கொள்கைகளுடன் தேசிய கொள்கைகளை சிறப்பாகப் பிரயோகித்தலும் ஒருங்கிணைப்பின் ஊடாக மிக முன்மாதிரியான தாபன முகாமைத்துவமொன்றையும் ஒருங்கிணைப்பொன்றையும் உறுதிப்படுத்துதலும்.

10. மாகாணசபையினதும் அரசாங்கத்தினதும் கொள்கைகளை சிறப்பான முறையில் ஒருங்கிணைப்புச் செய்வதன் ஊடாகவும் அரசதுறை, தனியார்துறை ஆகிய இரு தரப்புகளதும் உயர்ந்தபட்ச நிதி மற்றும் கைத்தொழில் உதவியை உறுதிப்படுத்தி மாகாணத்தினுள் பேண்தகு அபிவிருத்தியொன்றை உறுதிப்படுத்துதல்.

தொலைநோக்கு

ஒத்துழைப்பு மற்றும் பேண்தகு அபிவிருத்தியின் ஊடாக மேல்மாகாணத்தின் முன்னேற்றத்தை எய்துதல்.

பணித்திட்டம்

நிதி, பௌதிக மற்றும் மனிதவளத்தை உயர்ந்தமட்டத்தில் கையாள்வதன் ஊடாக சகல சமூகங்களுக்கும் நன்மைகளைக் கொண்டுவரக்கூடிய சமாதானமும் ஒத்துழைப்பும் மிக்க பேண்தகு அபிவிருத்தியொன்றை நிலைநாட்டுதல்.

5851130

மக்கள் தொகை

369420

பகுதி

3654

சதுர கிலோ மீட்டர்

3808

GDP per capital